நலவியல்:
சுவைமிகு மட்டன் சமையல்
சுவைமிகு இறால். நண்டு சமையல்
சுவைமிகு சிக்கன் சமையல்
செட்டிநாட்டு சமையல்
சுவைமிகு சைவ சமையல்
சுவைமிகு டிபன் சமையல்
உடல்நலம் காக்கும் கிராமியச் சமையல்
வகித்த பதவிகள்:
தமிழகத்தின் முதல் பெண் பதிப்பாளர் - வனிதா பதிப்பகம் - நிறுவனர்
தலைவர், அம்சா கல்வி அறக்கட்டளை
தலைவர், நங்கைநல்லூர் மகளிர் மன்றம்
புரவலர், திருக்குறள் பேரவை, நங்கைநல்லூர்
வாழ்நாள் உறுப்பினர், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
முதல் பெண் பதிப்பாளர் உருவான கதை :
1978ல் தேர்வு குழுவும் தீந்தமிழ் இலக்கணம் என்ற நூலை வாணுவம்பேட்டை திருவள்ளுவர் இலக்கிய மன்ற தலைவர் கோ.பார்த்தசாரதி அவர்கள் அம்சவேணி அவர்கள் பதிப்பித்த நூலை வெளியிட்டு பெருமை சேர்த்தார். மேலும், அவரால் வெளியிடப்பட்ட பல நூல்கள் திருவள்ளுவர் இலக்கிய மன்றமே ஆயிரம் பேர் கொண்ட சான்றோர் அவையில் வெளியிட்டு 1978லேயே பதிப்பகத்தை பெருமைப்படுத்தியது. இவர் 1978ல் பெண் எழுத்தாளராக மட்டுமில்லாமல் மற்ற அனைத்து எழுத்தாளர் நூல்களை 40 ஆண்டுகளாக பதிப்பித்து முதல் பெண் பதிப்பாளராக விளங்குகிறார். இவர் தன்னுடைய நூல்களை மட்டும் வெளியிடாமல், அனைத்து எழுத்தாளர்களின் நூலையும் வெளியிட்ட முதல் பெண் பதிப்பாளர்.
சிறுவர்களுக்கான நூல்களாகிய சிறுவர் இன்னிசைப் பாடல்கள் , சாரணயர் இயக்கம், இனிய தமிழில் இலக்கண பிழையின்றி எழுதும் முறைகள் போன்ற நூல்களையும் மாணவர்கள் இலக்கண பிழையின்றி எழுத பயிற்சி நூல்களையும் சிறுவர்கள் நூல்களை எழுதிய எழுத்தாளர்கள் நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் 40 ஆண்டுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்ட முதல் பெண் பதிப்பாளர் ஆவார்.
கல்வித்துறை :
கல்வித்துறையின் வழி சாரண இயக்கமும் சமுதாய மேம்பாடும், மது விழிப்புணர்வு கல்வி, தமிழக கல்வி அன்றும் இன்றும் போன்ற கல்வி தொடர்பான 500க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு பெருமை பெற்றது.
கல்வியியல் துறை :
கல்வியியல் துறையை சார்ந்த 300க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு கல்வித்துறையில் சிறந்த நூல்களை வெளியிடும் முத்திரை பதித்த முதல் பெண் பதிப்பாளராகவும் விளங்கியது பல்லாயிரம் கணக்கான மாணவர்களுக்கு ஏற்ற சிறந்த நூல்களை வெளியிட்டது. கல்வியியல் பயிலும் மாணவர்கள் தேடி வந்து படிக்கும் நூல்களை வெளியிடும் முதன்மை பதிப்பகமாக விளங்கியது.
அனைத்து நூல்களை வெளியீடு :
அனைத்து துறை வல்லுநர்களும் எழுதிய நூல்களை வெளியிட்டு அனைத்து நூல்களின் முன்னோடி முதன்மை பதிப்பகமாக திகழ்கிறது வனிதா பதிப்பகம்.
இல்லந்தோறும் திருக்குறள் :
திருக்குறள் மூலம் உரைநூல்களை வெளியிட்டு விலையின்றி கிராமப்புறங்களிலும் நங்கைநல்லூர் வாழ் ஒவ்வொரு வீட்டிற்கும் விலை இன்றி திருக்குறள் நூல்களை வழங்கியது திருக்குறள் நூல்கள் 10 லட்சம் சென்றுள்ளது.
அதில் 2 லட்சம் பிரதிகள் இலவசமாக வழங்கி இல்லந்தோறும் திருக்குறள் என்ற வரலாற்று சேவையை செய்துள்ளார் அம்சவேணி அவர்கள். திருக்குறள் சேவைக்காக பதிப்பகத்தில் இருந்து வரும் வருவாயில் ஒரு பகுதியை 2018 வரை சுமார் 30 லட்சம் வரை தொண்டு செய்துள்ளார்.
மாணவர்கள் திருக்குறளை புரிந்து படிக்கும் வகையில் மூலநூலை வெளியிட்ட முதன்மை பெற்றது.
அழைப்பிதழை நூலாக கொடுத்தல் :
முதல் பெண் பதிப்பாளரான அம்சவேணி அவர்கள் முதன் முதலில் நூலிலேயே திருமண அழைப்பிதழை இணைத்து வெளியிட்டு திருமண அழைப்பிதழ் கொடுத்தது இப்பதிப்பகத்தின் சிறந்த தனித்தன்மை என தினமணி இதழ் பாராட்டி உள்ளது. பெண் பதிப்பாளராக முதன்முதலில் திருமண அழைப்பிதழ் நூலை வெளியிட்டது இவரே.
ஓலைச்சுவடி வடிவிலே திருக்குறள் உரையும் ஆங்கில உரையும் :
இணைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கியது இப்பதிப்பகத்தின் சிறப்பிற்குரியதாகும். கணக்கியல் தொடர்பாக 30க்கும் மேற்பட்ட நூல்களையும் சாரண இயக்கம் தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டு முதன்மையான முத்திரை பதித்த பதிப்பகமாக விளங்குகிறது.
வனிதா பதிப்பகம் பெரிய புராணம், திருவாசகம், திருமந்திரம், கந்தபுராணம் தேவாரம், கம்பராமாயணம் போன்ற நூல்களுக்கு உரையுடன் வெளியிடப்பட்டது. திருவிளையாடற் புராணம், நாடு போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள், மக்கள் இசைப் பாடல்கள் போன்ற இலக்கிய நூல் பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள் போன்ற நூல்களை படைத்து தற்கால கவிஞர்களின் கவிதைகளையும் வெளியிட்டு பதிப்புலகில் முத்திரை பதித்த முதன்மை பதிப்பகமாக திகழ்கிறது.
தற்கால மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்ற வகையில் தமிழக தேர்வாணையம் நடத்தும் அனைத்துப் போட்டி தேர்வுகளுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC நூல்களை வெளியிட்டு வழங்கி வருவதால் இந்நூலை படித்து ஆயிரக்கணக்கில் தேர்வணைய தேர்வு எழுதி வெற்றி பெற்று வேலை பெற்றுள்ளனர். பத்திரிகை பாராட்டும் போட்டித் தேர்வுக்கான நூல்களை வெளியிடும் முதன்மை பதிப்பகமாக தமிழகத்தில் சிறந்து விளங்குகிறது. ஜெயம் TNPSC I, II, IV, ஜெயம் TRB, ஜெயம் UGC, ஜெயம் SCERT போன்ற புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
கட்டாய தமிழ் மொழித் தேர்வு மற்றும் மதிப்பீட்டு தேர்வுக்குரிய நூல்களை வெளியிட்டு வேலை வாய்ப்பு பெற வழிகாட்டும் முத்திரை பதித்த முதன்மை பதிப்பகமாக ஊடகவியல் பாராட்டி உள்ளனர்.
இளங்கலைப் பயிலும் மாணவர்கள் பொதத் தமிழ் நான்கு பருவங்களுக்கும் பாடத்திட்ட முறைப்படி நூலை வெளியிட்டு தமிழ் திறனை வளர்த்து வரும் பதிப்பகம் வனிதா பதிப்பகம் என இதழாளர்களின் பாராட்டையும் பெற்றது.
வனிதா பதிப்பகத்தை தொடங்கியது மட்டுமின்றி தானும் எழுத்தாளராக முப்பது நூல்களை எழுதி வெளியிட்டதோடு 200க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு அனைத்து வகையிலும் முதன்மை பதிப்பாளராக விளங்குகிறார்.
தமிழக அரசு இவருடைய நூல்களை நாட்டுடைமையாக்கி சட்டமன்றத்தில் முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி நூல்களை நாட்டுடமையாக்க அறிவிப்பு செய்து பெண் எழுத்தாளர் அம்சவேணி குடும்பத்தாருக்கு தொகையும் வழங்கி சிறப்பித்த தமிழக அரசு மற்றும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி.
தமிழுக்கு தொண்டாற்றும் நூல்களை எழுதிய நூல்களை தமிழ் வளர்ச்சித் துறை நாட்டுடைமையாக்கியது. மகளிர் படைப்பாளர் அம்சவேணி நூல்களை நாட்டுடமை ஆக்கியது தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் உரிமத்தையும் உரிமத்தொகைகான காசோலையும் வழங்கினார்.
முதன்முதலில் திருமணத்திற்கு புத்தகம் வழங்கியார் :
திருமண விழாவிற்கும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பரிசு பெறும் விழாவிற்கும் வனிதா பதிப்பகம் பல நூல்களை வெளியிட்டுள்ளது. திருமண விழாவில் தாம்பூலம் என பழம் தேங்காய் மட்டும் வந்த காலத்தில் திரு.அம்சவேணி அவர்கள் நமது வீட்டில் நூல்களை வழங்கினால் காலத்திற்கும் நிலைத்திருக்கும் என தெரிவித்து பல்வேறு திருமணங்களில் தாம்பூலமாக புத்தகம் வழங்க வழி வகுத்தார். இவரே இவருடைய மகன் மகள்கள் திருமணத்திற்கும் நூல்களை தாம்பூலமாக வழங்கியவர் மற்றவர்களை செய்யச் சொன்னதை தன் இல்ல விழாக்களிலும் பின்பற்றினார்.
முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி :
முதல் பெண் பதிப்பாளராக பல அறிஞர்கள் கூற காரணம் இவர் 1978 முதல் 40 ஆண்டுகள் தொடர்ந்து பதிப்பக பணியை செய்தவர். 3000 மேற்பட்ட நூல்களை வெளியிட்டவர். தன் நூல்கள் மட்டும் வெளியிடாமல் 300க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டவர்.
நல்லாமூரில் அரசு நூலகம் அமைக்க இடம் வழங்கியது. பல்வேறு கிராமங்களில் இரவு பாடசாலை நடத்தியும், நல்லாமூர் கிராமத்தில் திருவள்ளுவர் சிலை அமைத்தும், லட்சக்கணக்கான மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் விலையில்லாமல் வழங்கியும். அம்சா கல்வி அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்களை வழங்கியும், சிறந்த முறையில் முதல் பதிப்பாளர் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கம் மற்றும் பரிசுகளை வழங்கியும் வந்தார்.
திருமண அழைப்பிதழாக புத்தகத்தை அறிமுகம் செய்த முதல் பெண் பதிப்பாளர் திருமண தாம்பூலத்திற்கு பதில் புத்தகத்தை வழங்கிய முதல் பெண் பதிப்பாளர். ஒன்பது லட்சம் இல்லம்தோறும் திருக்குறள் என செயல்பட்ட முதல் பெண் பதிப்பாளர் தினமணி, தினமலர், தி தமிழ் இந்து, தினகரன் போன்ற நாளிதழ்களால் தெரிவிக்கப்பட்ட முதல் பெண் பதிப்பாளர். சென்னை புத்தக கண்காட்சியில் 2019 முதல் தமிழக முதலமைச்சர் அவர்களால் சிறந்த பெண் எழுத்தாளர்களுக்காக முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது திலகவதி ஐ.பி.எஸ், ரமணிச்சந்திரன் சக்தி ஜோதி, இந்துமதி, பாரதி பாஸ்கர், ஃபர்வீன் சுல்தானா போன்ற பெண் எழுத்தாளர்களுக்கு தமிழ் முதலமைச்சர் அவர்களாலும் துணை முதலமைச்சர் அவர்களாலும் முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி விருது வழங்கப்பட்டு வருகிறது
அவருடைய எழுத்து பணியை பாராட்டி தமிழக அரசு அவருடைய நூலை நாட்டுடைமை செய்தது. இவருடைய புகழை போற்றும் வண்ணம் சுதந்திரம் போராட்டத் தியாகி தோழர்.நல்லகண்ணு, மானமிகு ஆசிரியர் கி.வீரமணி, அன்புமணி ராமதாஸ், நக்கீரன் கோபால், புஷ்பவனம் குப்புசாமி, திலகவதி ஐ.பி.எஸ். போன்ற பல அறிஞர்கள் முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி என அவருக்கு புகழ் சேர்த்துள்ளனர்.