Vanitha Pathippagam
நல்லாமூர் முனைவர்.கோ.பெரியண்ணன், அவர்கள் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், நல்லாமூரில் கோவிந்தசாமிக் கவுண்டருக்கும், தனலட்சுமி அம்மாளுக்கும் 15-03-1946இல் பிறந்தார்.
சமுதாயம், சமயம், இலக்கியம், இலக்கணம், கல்வியியல் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவர் நாட்டுபுறப் பாடல்கள் உலகளவில் பாராட்டப் பெற்று கிராமியப் பாடல் வித்தகர் என்னும் திருக்குறள் மாமணி என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
கோ.பெரியண்ணன் நல்லாமூரில் பிறந்தவர், இவருடைய தந்தை திரு.கோவிந்தசாமிக் கவுண்டர் அவர்கள், விவசாயப் பணியை மேற்கொண்டவர். அதே ஊரில் பிறந்த சின்னசாமி நாயக்கர் மகள் அம்சவேணி என்பவரை மணந்து ஒரு ஆண் மகனையும், இரு பெண் பிள்ளைகளையும் பெற்றார்.
நல்லாமூரில் தொடக்கக் கல்வியை மயிலம் சிவப்பிகாச சுவாமிகள் உயர்நிலைப் பள்ளியிலும். வித்துவான் படிப்பை மயிலம். சீர்வளர் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியிலும். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர் முனைவர் பட்டமும் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில். இளநிலை, முதுகலை கல்வியியல் பட்டங்களைப் பெற்றார்.
தமிழாசிரியராகக் கோபாலபுரம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில். 2 ஆண்டுகள் பணிபுரிந்தார். கோடம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 மாதங்கள் பணியாற்றினார். வேடந்தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். நங்கைநல்லூர், அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில். முதுகலைத் தமிழாசிரியராகப் 17 ஆண்டுகள் பணிபுரிந்தார். தமிழக அரசு பாடநூலில் இவர் எழுதிய மரம் வளர்போம் வாருங்கள் என்ற பாடல் 8ஆம் வகுப்பில் இடம் பெற்றது. இவர் 200 மேற்பட்ட இலக்கிய நிகழ்ச்சிகளில் சிறப்புரையாற்றியவர், கருத்தரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம் போன்றவற்றில் நடுவராக தமிழ் இலக்கியப் பணி செய்தவர்.
தலைமையாசிரியராகச் செங்கற்பட்டு அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் 8 ஆண்டுகள் பணியாற்றினார். மாவட்ட கல்வி அலுவலராக (பொ) செங்கற்பட்டு மாவட்டத்தில் பணியாற்றியவர். பேராசிரியராகத் தனலட்சுமி கல்வியியல் கல்லூரி பெரம்பலூர் 5 ஆண்டுகளும், முதல்வராக வந்தவாசி, துரை கல்வியியல் கல்லூரியில் 5 ஆண்டுகளும் பணிபுரிந்தவர். இவர் 50க்கும் மேற்பட்ட கல்வியியல் சார்ந்த தேசிய பன்னாட்டுக் கருத்தரங்குகளைத் நடத்தியவர். இவர் கல்வியியல் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றியப் பொழுது 40க்கும் மேற்பட்ட கல்வியியல் நூல்களை எழுதியவர்.
1974ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தில் இணைந்து வனக்கலைப் பயிற்சி பெற்றவர். செங்கற்பட்டு மாவட்டத்தின் செயலாளராகவும், ஆணையராகவும் பணியாற்றியப் பொழுது 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு அடிப்படை பயிற்சியை ஆலத்தூரில் அளித்தவர். ஜாம்புரி, கேம்புரி போன்ற முகாம்களில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கச் செய்தவர். இவர் எழுதிய சாரணர் இயக்கம் என்ற நூல் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதினைப் பெற்றது. சாரணர சாரணியர் இயக்கம் தொடர்பான 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தற்பொழுது மாநில சாரண சாரணியர் இயக்கத்தின் துணைத் தலைவராக 9 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். சாரணர் இயக்கம் தலைமையக ஆணையராகவும் பணியாற்றிய பொழுது சாரணியம் என்ற இதழின் ஆசிரியராக இருந்தவர்.
1. கிராமியப் பாடல்கள்
2. ஏற்றப்பாட்டில் இராமாயணம்
3. நல்லாமூர் நாட்டுப்புறப் பாடல்
4. திண்டிவனம் வட்டார நாட்டுப்புறப் பாடல்கள்
5. நாடு போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்
1. இனிய தமிழில் இலக்கணப் பிழையின்றி எழுதும் முறைகள் (படங்களுடன் தமிழில் வெளிவந்த முதல் நூல்)
2. தேன்தமிழைத் தெரிந்து கொள்வோம்
3. அடிப்படைத் தமிழிலக்கணம்
4. தேர்வுக்குதவும் தீந்தமிழிலக்கணம்
5. மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கான இலக்கணம்
6. தேர்வாணையத் தேர்வுக்கேற்ற இலக்கணம்
7. தமிழில் தவறின்றி எழுத, பேச, கற்க!
8. தமிழ் இலக்கணம் - தொடக்க நிலை
9. தமிழ் இலக்கணம் – உயர்நிலை
10. தமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்
1. கல்வி சார்ந்த செயற்பாடுகள்
2. சுற்றுப்புறச் சூழல் கல்வி
3. சுற்றுப்புறச் சூழலும் சுகாதாரப் பாதுகாப்பும்
4. சிந்தனை வளர்ச்சிப் பூக்கள்
5. பெரியண்ணன் கல்விச் சிந்தனைகள்
6. வனிதாவின் பொதுக் கட்டுரைகள்
7. சீர்மிகு செம்மொழிக்கல்வி
8. மது விழிப்புணர்வுக் கல்வி
1. வெற்றிக்கு வழிகள்
2. நினைவாற்றலுடன் வாழ்க்கையில் முன்னேற
1. தென் தமிழகம் தந்த தீயாக தீபங்கள்
2. டாக்டர் A.P.J. அப்துல் கலாம்
3. சாதனை படைத்த சான்றோர்கள் வரலாறு
4. வீர சிவாஜியின் வரலாறு
5. குருநானக் வரலாறு
6. வரலாற்றுப் புகழ் நல்லாமூர்
1. சிறுவர் இன்னிசைப் பாடல்கள்
2. சிறுவர் பாடல்கள்
3. சிறுவர்களுக்கான இசைப் பாடல்கள்
4. மாணவர்களுக்கு அப்துல்கலாம் – பொன்மொழிகள்
5. மாணவர்களுக்கு மா.பொ.சி.
6. மாணவர்களுக்கு பாரதிதாசன்
1. சாரணர் இயக்கம் (தமிழக அரசு விருது பெற்ற நூல்)
2 .சாரணர் இயக்கம் வளர்ந்த கதை
3. சாரணர் இயக்கமும் மாணவர் வளர்ச்சியும்
4. சாரணர் மாநில விருது பெறுவது எப்படி?
5. சாரணர் குடியரசுத் தலைவர் விருது பெறுவது எப்படி?
6. சிறுவர் சாரண இயக்கம்
7. சாரண சாரணியர்
8. சாரண சாரணியர் இயக்கப் பாடல்கள்
9. சாரண இயக்கப் பயிற்சிகள்
10. சாரண இயக்கச் செயற்பாடுகள்
11. சமுதாய மேம்பாட்டிற்குச் சாரணர் இயக்கம்
1.முத்தமிழகராதி (தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதினைப் பெற்றது)
1.இராம காதை
2.வில்லிப்புத்தூரார் மகாபாரதம்
1. திருக்குறள் பெரியண்ணன் உரை
2. திருக்குறள் கதைக் களஞ்சியங்கள் (1330 படங்கள், 1330 கதைகள்)
3. திருக்குறள் கதைக் களஞ்சியங்கள் அறத்துப்பால்
4. திருக்குறள் கதைக் களஞ்சியங்கள் காமத்துப்பால்
5. திருக்குறள் கதைக் களஞ்சியங்கள் பொருட்பால் தொகுதி - 1
6. திருக்குறள் கதைக் களஞ்சியங்கள் பொருட்பால் தொகுதி – 2
7. திருக்குறள் ஒரு பக்க படக்கதைகள்
8. திருக்குறள் ஓலைச்சுவடி
1. கல்வி உளவியல்
2. தற்கால இந்திய சமுதாயமும்
3. கற்பித்தல், கற்றல்
4. கலைத்திட்டத்தில் மொழி
5. குழந்தை உரிமைகள், பாதுகாப்பு
6. கற்றல் மதிப்பீடு
7. சுற்றுச்சசூழல் கல்வி
8. பள்ளி மேலாண்மை, நிர்வாகம்
9. பாலினம், பள்ளி, சமுதாயம்
10.கல்வியறிவும் கலைத்திட்டமும்
11.ஒருங்கிணைந்த பள்ளியை உருவாக்குதல்
12.யோகா, உடல்நலம், உடற்கல்வி
13.விழுமம் அமைத்திக்கான கல்வி
14.மனித உரிமைக் கல்வி
15.தொழில் கல்வியின் வழி சமூக ஈடுபாடு
16.பேரிடர் மேலாண்மை
17.சிறப்புக் கல்வி
18.வாழ்கைத் திறன் கல்வி
1.சிவஞானமாபாடியம் விளக்கவுரை
2.நீதி நூல்கள்
3.கம்பராமாயணம் பெரியண்ணன் உரை - பால காண்டம்
4.கம்பராமாயணம் பெரியண்ணன் உரை - அயோத்ய காண்டம்
5.கம்பராமாயணம் பெரியண்ணன் உரை - ஆரண்ய காண்டம்
கம்பராமாயணம் பெரியண்ணன் உரை - கிஷ்கிந்தா காண்டம்
7.கம்பராமாயணம் பெரியண்ணன் உரை – சுந்தரகாண்டம்
8.கம்பராமாயணம் பெரியண்ணன் உரை - யுத்த காண்டம் – 1
9.கம்பராமாயணம் பெரியண்ணன் உரை - யுத்த காண்டம் – 2
10.திருஞான சம்பந்தர் தேவாரம் பெரியண்ணன் உரை - 1,2,3 (பாகம் - 1)
11.திருஞான சம்பந்தர் தேவாரம் பெரியண்ணன் உரை - 1,2,3 (பாகம் - 2)
12.திருஞான சம்பந்தர் தேவாரம் பெரியண்ணன் உரை - 1,2,3 (பாகம் - 3)
13.திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் பெரியண்ணன் உரை - 4,5,6 (பாகம் - 1)
14.திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் பெரியண்ணன் உரை - 4,5,6 (பாகம் - 2)
15.திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் பெரியண்ணன் உரை - 4,5,6 (பாகம் - 3)
16.சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் பெரியண்ணன் உரை - 7ஆம் திருமுறை
17.பெரியபுராணம் பெரியண்ணன் உரை - பாகம் – 1
18.பெரியபுராணம் பெரியண்ணன் உரை - பாகம் – 2
19.கந்தபுராணம் பெரியண்ணன் உரை - பாகம் – 1
20.கந்தபுராணம் பெரியண்ணன் உரை - பாகம் – 2
21.கந்தபுராணம் பெரியண்ணன் உரை - பாகம் – 3
22.கந்தபுராணம் பெரியண்ணன் உரை - பாகம் – 4
23.கந்தபுராணம் பெரியண்ணன் உரை - பாகம் – 5
24.கந்தபுராணம் பெரியண்ணன் உரை - பாகம் – 6
25.கந்தபுராணம் பெரியண்ணன் உரை - பாகம் – 7
26.கந்தபுராணம் பெரியண்ணன் உரை - பாகம் – 8
27.கந்தபுராணம் பெரியண்ணன் உரை - பாகம் – 9
28.கந்தபுராணம் பெரியண்ணன் உரை - பாகம் – 10
29.திருமூலர் திருமந்திரம் பெரியண்ணன் உரை - பாகம் – 1
30.திருமூலர் திருமந்திரம் பெரியண்ணன் உரை - பாகம் – 2
31.திருமூலர் திருமந்திரம் பெரியண்ணன் உரை - பாகம் – 3
32. திருவிளையாடற்புராணம் பெரியண்ணன் உரை
1.6-ஆம் வகுப்புத் தமிழ்
1.9-ஆம் வகுப்புத் தமிழ்
3.11-ஆம் வகுப்புத் தமிழ்
4.11-ஆம் வகுப்புத் தமிழ்
5.12-ஆம் வகுப்புத் தமிழ்
6.12-ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ்
7.8-ஆம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் சுற்றுச்சூழல் பாடல் இடம்பெறல்.
1.தேசிய நல்லாசிரியர் விருது, மத்திய அரசு, இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்.
2.டாக்டர் இராதா கிருஷ்ணன் விருது, தமிழ்நாடு அரசு, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.கருணாநிதி.
3.சிறந்த நூலாசிரியர் விருது, தமிழ் வளர்ச்சித் துறை,மாண்புமிகு கல்வி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன்.
4.திருவள்ளுவர் விருது, தமிழக அரசு, மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. பழனிசாமி.
5.குறள் உரைக்கோ, சிறுவர் இலக்கிய மன்றம், புதுச்சேரி கல்வியமைச்சர் க.இலட்சுமி நாராயணன்.
6.மெடல் ஆப் மெரிட், பாரத சாரண சாரணியர், கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, தலைவர்
7.தமிழ்நிதி விருது, சென்னை கம்பன் கழகம், முன்னாள் அமைச்சர் இராம.வீரப்பன்
8.செம்பணிச் சிகரம் விருது, கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம், புதுவை சட்டப் பேரவைத் தலைவர் வ.சபாபதி
9.செம்மொழிச் செல்வர் விருது, செம்மொழிநாள் பன்னாட்டு மாநாடு, பிற்பட்டோர் நலத்துறை இயக்குநர் சீ.சுரேஷ்குமார்,இ.ஆ.ப.,
10.அமுதத் தமிழ் அரசு விருது, உலகத் தமிழ் செம்மொழிப் பேரவை, தமிழறிஞர் சாலமன் பாப்பையா.
11.ஞான ஒளித் திருத்தொண்டர் விருது, வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கம், வி.ஜி.சந்தோஷம் போன்ற 40க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.
நல்லாமூர் முனைவர்.கோ.பெரியண்ணன், தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக தமிழக அளவில் தமிழ் கருத்தரங்குகள் நடத்தி மாணவர்களிடையே தமிழின் சிறப்பைப் பரப்பி வருகிறார். தமிழ் தொண்டு புரியும் 100க்கும் மேற்பட்ட புலவர்களைத் தேர்ந்தெடுத்து சிறப்பு செய்து அவர்கள் பணி மேலும் சிறக்க வழிவகை செய்து வருகிறார். 2003 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் நாள் டாக்டர் இராதாகிருஷ்ணன் வாழ்ந்த இல்லத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 1700க்கும் மேற்பட்ட ஆசிரியப் பெருமக்களுக்கு ஆசிரியச் செம்மல் விருது வழங்கி அவர்களின் பணி மேலும் சிறக்க பாடுபட்டு வருகிறார்.
அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழில் தவறின்றி எழுதும் முறைகள் தமிழ் கவிதைகள் எழுதுவது எப்படி, எழுத்தாளர்கள் புதியன படைக்கும் திறமையை வளர்க்கும் முறைகள் பற்றி பயிற்சி அளித்து எழுத்தாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த கவிதைகள் படைத்த எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து டிசம்பர் 11ஆம் தேதி பாரதி பணிச் செல்வர் என்ற விருதை வழங்கி எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். பாரதிதாசன் நாளாகிய ஏப்ரல் 29 அன்று பாண்டிச்சேரிக்கு சிறந்த எழுத்தாளர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு பாவேந்தர் பணிச்செல்வர் விருது வழங்கி புதிய கவிஞர்களை உருவாக்கி வருகிறார்.
நல்லாமூரில் அரசு நூலகம் அமைக்கஇடம் வாங்கித் தந்தும். பழைய மாணவர் சங்கம் நிறுவி இரவுப் பாடசாலை அமைத்து, தட்டச்சுப் பயிலகம், போட்டித் தேர்வுப் பயிற்சி நடத்தியும், சொந்த இடத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவியும், மனனப்பயிற்சியளித்தும் வருகிறார். நங்கைநல்லூரில் 2மாடி கட்டடம் கட்டி அதில் திருவள்ளுவர் சிலை நிறுவி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை திருக்குறள் வகுப்பு நடத்தியும் 100ஆசிரியர்களுக்குச் சிறந்த ஆசிரியர் விருதுகளை ஆசிரியர் தினத்தில் வழங்கிப் பாராட்டி வருகிறார்.
நங்கைநல்லூரில் 2 மாடி கட்டடம் கட்டி அதில் திருவள்ளளுவர் சிலை நிறுவி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை திருக்குறள் வகுப்பு நடத்தியும் 100 ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதுகளை ஆசிரியர் தினத்தில் வழங்கிப் பாராட்டி வருகிறார்.
இலங்கை மாநாட்டில் தலைமையேற்றும் சிங்கப்பூர் தமிழாசிரியர் மாநாட்டில் தலைமையுரையாற்றியும், மலேசிய நாட்டில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டில் கருத்துரை, திருக்குறள் மாநாட்டில் ஆய்வுரை வழங்கினார். மொரிஷியஸ் மாநாட்டில் புலம் பெயர் தமிழர் பண்பாடு பற்றி ஆய்வுரை யாற்றினார். ஆஸ்திரேலியா நாட்டில் சிலப்பதிகார மாநாடு. கம்போடியா நாட்டில் திருக்குறள் மாநாடு அந்தமானில். தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் மாநாடு போன்றவற்றில் தலைமையுரையும், சிறப்புரையும் ஆற்றியுள்ளார். தாய்லாந்து, இந்தோனிஷ்யா போன்ற நாடுகளில் தமிழின் சிறப்பை வெளிப்படுத்தினார்.
முத்தமிழ் இல்லம், 9ஏ, மேக்மில்லன் காலனி, நங்கைநல்லூர், சென்னை-600061.
செல்பேசி : 9444494839.
இ.மெயில் : gperiannan47@gmail.com
Enter your e-mail address to receive regular updates, as well as news on upcoming events and special offers.