Vanitha Pathippagam
1978ஆம் ஆண்டு தன் மகள் வனிதாமணி பெயரில் வனிதா பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இதன்மூலம் உயர்நிலை - மேனிலைப் பள்ளிக்கான இலக்கண நூல் வெளியிட்டார்.
அந்த இலக்கண நூல் விலை ஒரு ரூபாய் மட்டுமே. அதை 75 காசு கொடுத்து யாரேனும் வந்து வாங்கினால் மிகவும் மகிழ்ச்சி அடைவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தினமும் இத்தொகையைக் கொண்டு வீட்டுச் செலவிற்குப் பயன்படுத்துவார்.
பதிப்பக வளர்ச்சிக்காக முதன்முதலில் பதிப்பகத் துறையின் முதல் பெண் பதிப்பாளராக 1978ஆம் ஆண்டு பதிப்பகத்தை தொடங்கி 40 ஆண்டுகள் தொடர்ந்து பதிப்பகப் பணியில் ஈடுபட்டு வந்தவர் அன்னை அம்சவேணி பெரியண்ணன். யாரும் வெளியிடாத நூல்களை வெளியிட வேண்டும் அடுத்த இளம் தலைமுறையை வழிநடத்துகின்ற நூல்களை மட்டுமே வெளியிட வேண்டும் அடுத்த இளம் தலைமுறையை வழிநடத்துகின்ற நூல்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்ற இலட்சிய நோக்கத்தோடு பதிப்பகப் பணியைத் தொடங்கியவர் அன்னை அம்சவேணி பெரியண்ணன். அக்காலக்கட்டத்தில் பெண்கள் தொழில் தொடங்குவது என்பது சாத்தியமற்றதாகக் காணப்பட்ட காலத்தில் தன் கணவருடைய முழு ஒத்துழைப்புடன் வனிதா பதிப்பகம் என்னும் பதிப்பகத்தை உருவாக்கினார்.
1978ஆம் ஆண்டு வெளிவந்த மாணவர்களுக்கான இலக்கணம் என்னும் நூல் 1975இல் துவக்கப்பட்ட திருவள்ளுவர் இலக்கிய மன்றத்தின் திரு.கோ.பார்த்தசாரதி அவர்களால் வரலாற்று சிறப்புமிக்க நூல் வெளியீட்டு விழாவாக 1978ஆம் ஆண்டு நூல் வெளியிடப்பட்டது. வனிதா பதிப்பகம் வெளியிட்ட முதல் நூலே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நூலாக அன்னை அம்சவேணி பெரியண்ணன் அவர்கள் கருதுவார்.
தன் கணவர் ஆர்வத்தின் காரணமாகப் புத்தகம் வெளியிடுவதை உயர்வாகக் கருதுவார். ஒரு சமயம் கிராமியப் பாடல் வெளியிட்டு, 300 ரூபாய் பெற்று வந்ததைப் பெருமையாக எண்ணினார். பதிப்பக வளர்ச்சிக்காகத் தமிழக அரசிடமிருந்து அரசு நலநிதியிலிருந்து 2500 ரூபாய் கடன்பெற்று பதிப்பகப்பணியை மேலும் உயர்த்துவதற்கான செயலில் ஈடுபட்டு "சிறுவர் இன்னிசைப் பாடல்கள்" என்ற நூலை வெளியிட்டார். அந்நூல் பாண்டிச்சேரி கல்வித்துறையால் 100 பிரதிகள் வாங்கப்பட்டன. முதன்முதலில் இந்த 100 புத்தகம் என்பது அக்காலத்தில் மிகப்பெரிய ஆணையாகவே கருதப்பட்டது. பதிப்பகத்தினுடைய வளர்ச்சிக்கும் சிந்தனைக்கும் இந்த நூலினுடைய பெரிய விற்பனை அவரை ஊக்குவித்தது. சிறுவர் சாரணர் இயக்கம் தோன்றிய கதை. இரண்டாந்தரச் சாரணர், மூன்றாம் தரச் சாரணர், மாநில விருது பெறுவதெப்படி? குடியரசுத் தலைவர் விருது பெறுவதெப்படி? போன்ற சாரண இயக்க நூல்களை வெளியிட்டு தமிழகத்திலேயே கல்வி சார்பான நூல் வெளியிடுவதில் முத்திரைப் பதித்த பதிப்கமாகத் திகழச் செய்தார். சிறந்த எழுத்தாளர் முத்தமிழ்க் கவிஞர் கோ.ஆலந்தூர் மோகனரங்கன் அவர்கள் 1978ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து திரு.கோ.பெரியண்ணன் அவர்களுடன் புத்தகம் வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு மாற்று வழி குறித்து கலந்தாலோசித்து செயற்பட்டனர். பெரியண்ணன் அவர்கள் பள்ளியில் பாடம் எடுக்கும் முறையைப் பார்த்த நண்பரும் தலையாசிரியருமான திரு.துரைநரசிம்மன் அவர்கள் 1978இல் 'நீங்கள் மாணவர்களுக்கு எளிய நடையில் இலக்கணத்தை பாடம் கற்பிக்கும் முறையை பார்த்து வியந்ததாகவும் எனவே நீங்கள் ஏன்? மாணவர்களுக்கான இலக்கணம் என்ற பெயரில் நூலை வெளியிடலாமே!' என்ற கருத்தை முன்வைத்தார் அதனை அன்னை அம்சவேணி பெரியண்ணன் அவர்களுடன் பெரியண்ணன் கலந்தாலோசித்ததால் மாணவர்களுக்கான இலக்கணம் என்னும் நூல் வெளியிடுவதற்குக் காரணமாக அமைந்தது. பிற்காலங்களில் பதிப்பக வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கியவர்களில் முக்கியமானவர்களாக கருதப்படுபவர்கள் ஓவியர் ஆனந்தன், வெற்றி அச்சகம் திரு.குப்புசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ் திரு.சேது சொக்கலிங்கம் அவர்களும், ராஜேஸ்வரி புத்தக நிலையம் திரு.பாலகிருஷ்ணன் அவர்களும், பதிப்பக வளர்ச்சிக்கு அதிக அளவில் துணை புரிந்தவர்களாகத் திகழ்ந்தனர்.
கோ.பெரியண்ணன் அவர்கள் எழுதிய "சாரணர் இயக்கம்" என்ற நூல் தமிழக அரசின் சிறந்த நூல் எழுத்தாளருக்கான விருதையும், பதிப்பாளர்களுக்கான விருதையும் வனிதா பதிப்பகம் பெற்றது. கல்வியியல் சார்ந்த நூல்கள் வெளியிடுவதில் கற்பித்தலில் புதிய அணுகுமுறை என்னும் நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூல் வெளியீட்டாளருக்கான விருது கிடைத்தது. இயற்பியல் அகராதி, வேதியியல் அகராதி, முத்தமிழ் அகராதி, திரைப்பட பாடலாசிரியர் கவிமுகிலின் 'பூட்டாங்கயிறு' (கவிதை), சித்தர்.திருத்தணிகாசலம் அவர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு உணவே மருந்து (மருத்துவம்), வழக்கறிஞர் சேசாசலம் அவர்களின் கூட்டுறவு சங்கங்களுக்கான சட்டங்களும் விதிகளும் (சட்டம்), போன்ற பல்வேறு நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூல் வெளியீட்டாளருக்கான விருதை திரு.அன்னை அம்சவேணி பெரியண்ணன் அவர்கள் வனிதா பதிப்பகம் மூலம் பெற்றுள்ளார். திருப்பூர் தமிழ்ச் சங்கம் வழங்கிய சிறந்த நூல் வெளியீட்டாளருக்கான விருது, நெய்வேலி லிநைட் கார்ப்பரேஷன் வழங்கிய சிறந்த நூல் பதிப்பாளருக்கான விருதைப் பலமுறை பெற்றுள்ளார். பாரதி பணிச்செல்வர் போன்ற பல்வேறு இலக்கிய விருதுகளையும் அன்னை அம்சவேணி பெரியண்ணன் பெற்றுள்ளார்.
தமிழில் இதுவரை வெளிவராத பல்வேறு நூல்களை ஆராய்ந்து வெளியிட்டு பதிப்பகத்துறையில் தனி முத்திரை பதித்த பதிப்பாளராக அன்னை அம்சவேணி பெரியண்ணன் அவர்கள் திகழ்ந்தார். அவர்கள் வெளியிட்ட இயற்பியல் கலைச்சொல் அகராதி, வேதியியல் கலைச் சொல் அகராதி, கணித கலைச்சொல் அகராதி, கணினி கலைச்சொல் அகராதி, பள்ளி நிர்வாகக் கலைக் களஞ்சியம், பழங்கால இலக்கியங்களில் பள்ளிக் கணிதம், காகித மடிப்பில் கணிதம், களிப்பூட்டும் கணிதம், கோலங்களில் கணிதம், திருக்குறள் கதைக் களஞ்சியங்கள் (படங்களுடன் 2500 பக்கங்கள்), ஒரு பக்க திருக்குறள் படக்கதைகள் (1330 குறள், படங்கள், கதைகள், விளக்கங்கள்), தற்காப்பு கலைச் செம்மல் கோபுடோ ஏ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய கராத்தே கலைக் களஞ்சியம், தற்காப்புக் கலை கோபுடோ, நன்சக்கு போன்ற தமிழில் முதன்முதலில் தற்காப்பு நூல்களையும், கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் எழுதிய மக்களிசை பாடல்கள் போன்ற தமிழில் வெளிவராத பல்வேறு அரிய நூல்களை வனிதா பதிப்பகம் வெளியிடுவதை பெருமையாக கருதினார் அன்னை அம்சவேணி பெரியண்ணன் அவர்கள். சரியான முறையில், தமிழில் தவறின்றி வரும் நூல்களையே வெளியிட்டார். தவறாகத் தெரிந்தால், வெளியிட்டாலும் அதைக் கிழித்து அழித்து விடுவார். மாணவர்கள் பயன்பெறத் தக்க வகையில் முத்தமிழ் திறன்வளர் பயிற்சி ஏடுகள், முத்தமிழ் திறன்வளர் கையெழுத்து பயிற்சி நூல்கள், அகமதிப்பீட்டு ஏடுகள் போன்றவற்றை நல்லதாளில், குறைந்த விலையில் வெளியிட்டு வழங்கி வந்தவர். ஆசிரியர் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக வழிகாட்டி நூல்களை வெளியிட்டவர். பெரியண்ணன் தமிழ் உரை, Big Brother's Guide போன்ற நூல்கள் 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது
பதிப்பகத் துறையில் முதல் பெண் பதிப்பாளராகப் போட்டித் தேர்வுக்கான நூலை வெளியிட்ட பெருமையும் இவரையே சாரும். பதிப்பகத் துறையில் பெண் பதிப்பாளர் யாரும் தற்பொழுது போட்டித் தேர்வுக்கான நூல்களை வெளியிட்டதில்லை. மாணவர்களின் மீது நலன்கொண்டு வனிதாவின் ஜெயம் TET என்னும் நூல் தமிழகத்தின் முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு கையேடாக வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வனிதாவின் ஜெயம் என்ற பெயரில் TNPSC, Group IV, TNPSC Group II, TNPSC I, VAO, SCERT - DIET, TET Paper-I, TET Paper-II Social Science, TET Paper-II Science and Maths, TNPSC பொதுத் தமிழ், NEET Physics, NEET Chemistry, NEET Biology, நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம், குடிமைப்பணி தேர்வுக் கட்டுரைகள் போன்ற பல்வேறு போட்டித் தேர்வுக்கான நூல்களை வெளியிட்ட முதல் பெண் பதிப்பாளர் இவரே.
திருக்குறள் நெறியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லந்தோறும் திருக்குறள் என திருக்குறள் பெரியண்ணன் உரையை 10 லட்சம் நூல்களை அடக்க விலைகே விற்பனை செய்து பதிப்புலகில் சாதனைப் படைத்தவராகத் திகழ்ந்தார். 2,00,000 பிரதிகளை விலையில்லாமல் பல்வேறு அமைப்புகளுக்கும், பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கி திரக்குறள் நெறி பரப்புவதற்காகத் தன் பதிப்பகத்தில் வரும் வருமானத்தில் ஒரு தொகையாக சுமார் 10 இலட்சம் ரூபாய் திருக்குறள் நெறி பரப்புவதற்காகவே தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
தமிழக வரலாற்றிலேயே தமிழக சட்டமன்றத்தில் ஜூன் மாதம், 2018ஆம் ஆண்டு வனிதா பதிப்பகம் அன்னை அம்சவேணி பெரியண்ணன் அவர்களால் வெளியிடப்பட்ட ஓலைச்சுவடி திருக்குறள் பெரியண்ணன் உரை அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழக அரசால் வழங்கப்பட்டது. இதுகுறித்து அனைத்து நாளிதழ்களும், தொலைகாட்சிகளும் பாராட்டின.
இவர் புதியன படைக்கும் ஆர்வத்துடன் திருக்குறள், தமிழ் ஆங்கில உரையை ஓலைச்சுவடி வடிவில் அளித்துப் பெருமை கொண்டவர். தமிழ் கற்க கற்பிக்க, அருந்தமிழ் கற்பிக்கும் முறைகள், இனிய தமிழில் இலக்கணப் பிழையின்றி எழுதும் முறைகள், அடிப்படைத் தமிழிலக்கணம் தமிழில் பிழையின்றி எழுத பேச, கற்க போன்ற பல நூல்களைத் தமிழ் இலக்கணம் சார்ந்து வெளியிட்டு தமிழ் வளர்க்கும் பதிப்பகமாகத் திகழச் செய்தார்.
1999ஆம் ஆண்டு திருமதி.அம்சவேணி அவர்களின் பார்வையில் படாமல் அப்பொழுது பணியில் இருந்த மேலாளர் அவர்களால் ஒரு சில நூல்கள் வெளிவந்தன. புத்தகம் வெளிவந்த பின் அதைப் பார்த்த அம்மையார் அவர்கள் அப்புத்தகத்தில் அதிகளவில் அச்சுப் பிழையுடன் வெளிவந்ததை அறிந்தார். அப்புத்தகத்தை விற்பனைக்கு அனுப்பாமல் தவறான புத்தகங்கள் மக்களிடையே சென்று சேரக்கூடாது என அனைத்து நூல்களையும் இரண்டு துண்டாக வெட்டி எடைக்குப் போட்டவர். பதிப்பகத்திற்கு பல எழுத்தாளர்கள் எழுதி கொடுத்த கையெழுத்துப் பிரதிகள் நல்ல நூலாக இருந்தால் மட்டுமே வெளியிடுவார். புத்தகம் சரியில்லையென்றால் அப்புத்தகத்தினுடைய கைப்பிரதியை அப்படியே திருப்பிக் கொடுத்து விடுவார். தரம் வாய்ந்த சிறந்த நூல்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்பதை குறிகோளாகக் கொண்டு வாழ்ந்தார்.
சமுதாயச் சீரழிவுக்குக் காரணமான மதுவைக் குடித்து அழியும் மானிடரைத் திருத்த மதுவின் தீமைகள் என்ற நூலை வெளியிட்டார். மாணவர்கள் மதுவைப் பற்றிய நூல் வெளியிட எண்ணினார். மது விழிப்புணர்வுக் கல்வி என்ற நூலை வெளியிட்டு, விழாக்களில் விலையின்றி வழங்கியவர். மற்றவர்கள் எழுதும் நூல்களைப் படித்து, தகுதியிருப்பின் வெளியிடுவார். நன்றாக இல்லை எனத் தெரிந்தால், கையெழுத்துப் பிரதியை உடனே திருப்பிக் கொடுத்து விடுவார். இவரின் பார்வையில் படாமல் எந்த நூலும் வெளிவந்ததில்லை
1. பெண் கல்வி
2. சீர்மிகு திருத்தலங்கள்
3. அருள்மிகு அம்மன் திருத்தலங்கள்
4. தசாவதார மகிமையும் துணைப் பாத்திரப் பெருமையும்
5. அன்னை அரவிந்தர்
6. டாக்டர் ஏ.பெ.ஜெ.அப்துல்கலாம் பொன்மொ
ழிகள்
7. வெற்றி நமதே
8. செங்கோல் செலுத்திய செம்மல்கள்
9. கோகுல நாயகன்
10. யோக தட்சிணாமூர்த்தி
11. சுவைமிகு மட்டன் சமையல்
12. சுவைமிகு இறால், நண்டு சமையல்
13. சுவைமிகு சிக்கன் சமையல்
14. செட்டிநாட்டு சமையல்
15. சுவைமிகு சைவ சமையல்
16. சுவைமிகு டிபன் சமையல்
17. உடல்நலம் காக்கும் கிராமியச் சமையல்
18. நான்மணிக்கடிகை அம்சவேணி பெரியண்ணன் உரை
19. சிறுபஞ்சமூலம் அம்சவேணி பெரியண்ணன் உரை
20. திரிகடுகம் அம்சவேணி பெரியண்ணன் உரை
21. ஏலாதி அம்சவேணி பெரியண்ணன் உரை
22. நாலடியார் அம்சவேணி பெரியண்ணன் உரை
23. முதுமொழிக் காஞ்சி அம்சவேணி பெரியண்ணன் உரை
24. கார் நாற்பது களவழி நாற்பது அம்சவேணி பெரியண்ணன் உரை
25. கைந்நிலை அம்சவேணி பெரியண்ணன் உரை
26. ஐந்திணை ஐம்பது அம்சவேணி பெரியண்ணன் உரை
27. ஆசாரகோவை அம்சவேணி பெரியண்ணன் உரை
28. இன்னா நாற்பது இனியவை நாற்பது அம்சவேணி பெரியண்ணன்
29. ஐந்திணை எழுபது அம்சவேணி பெரியண்ணன் உரை
30. இராமகாதை
திருமண அழைப்பிதழ் என்றாலே பத்திரிகையாகவே இருக்கும். திருமணம் முடிந்தபின் அனைவரும் அப்பத்திரிகையைத் தூக்கி எறிந்து விடுவர். அவ்வாறு இல்லாமல் தமிழகத்தில் முதன்முதலில் திருமண அழைப்பிதழைப் புத்தகமாக தன் மகன் பெ.மயிலவேலன் - ஜெ.ஜெயராணி திருமணத்தில் யாரும் சிந்திக்காத வகையில் புதிய எண்ணத்தோடு நீதி நூல் என்ற புத்தகத்தையே அழைப்பிதழாக அச்சிட்டு அனைவரும் இல்லங்களுக்கும் கொண்டு சேர்த்தார். இது குறித்து தினமணி நாளிதழ் திருமண அழைப்பிதழைப் புத்தக வடிவில் முதன்முதலில் அன்னை அம்சவேணி பெரியண்ணன் அவர்கள் வெளியிட்டதை மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களைத் தங்களுடைய பத்திரிகையில் பதிவு செய்தது. இதைப் பார்த்த பாவேந்தருடைய மகன் மன்னர்மன்னன் அவர்கள் திருமணம் முடிந்தாலும் அந்த திருமண புத்தக அழைப்பிதழை தனக்கு வேண்டும் எனக் கடிதம் மூலம் தெரிவித்தார். அவருக்கு அந்த நூல் அனுப்பப்பட்டது. அதேபோன்று தன் மகள் வனிதாமணி திருமணத்திற்கு வந்தவர்கெல்லாம் திருக்குறள் பெரியண்ணன் உரை நூலை அன்புடன் கொடுத்து மகிழ்ந்தவர் நங்கைநல்லூர் தமிழ்ச் சான்றோர்கள் 36 பேர் வாழ்க்கை வரலாற்றை நூலாக்கி அனைவருக்கும் விலையில்லாமல் கொடுத்தவர்.
தேசிய நல்லாசிரியராகிய தன் கணவன் வரலாற்றையே வெற்றிப்படிகள் என்னும் நூலாக்கி; தன் தாய், தந்தை, மாமனார், மாமியார் படங்களைப் போட்டு, அனைவருக்கும் வழங்கியவர்.
டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் இலங்கையில் 16 சிலைகள் நிறுவின விழாவிற்கு 33 பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர் ஆகியோரடன் 15.06.2017 முதல் 23.06.2017 வரை சென்று வந்ததை அலைகடலுக்கு அப்பால் என்ற நூலை வெளியிட பல்லாற்றானும் உதவி நல்கியவர். சென்றவர்களை வழியனுப்பி வைத்து மகிழ்ந்தவர். தன் கணவனார் பெறும் சிறப்பெல்லாம், தான் பெற்றதாகவே கருதிப் போற்றும் பண்புடையவர். 5.9.2000 டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றபொழுது, 15,01,2001 அன்று சாரண இயக்க நூல் பெற்றபொழுதும், 5,9,2002 அப்துல் கலாம் அவர்களிடம் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றபொழுதும், உடனிருந்து, மகிழ்ந்ததைத் தன் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளார். இக்குறிப்புகள் பெரியண்ணனின் வெற்றிப் படிகள் என்னும் நூலெழுதத் துணை புரிந்தன.
பல்லாண்டுகள் ஆய்வு செய்து, பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் குருவிக்கரம்பை சண்முகம் அவர்கள் நெறியாளராக வழிகாட்ட "நல்லாமூர் நாட்டுப் புறப்பாடல்கள்" என்னும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் நூலை, நூலாக வெளியிட்டுப் பெருமை சேர்த்தவர் அன்னை அம்சவேணி பெரியண்ணன். அப்பாடல்களைத் தன் கணவர் பாட, அதைக் கேட்ட மகிழ்வார் அன்னை அம்சவேணி பெரியண்ணன்.
"திண்டிவனம் வட்டார நாட்டுப்புறப் பாடல்கள்" என்னும் தலைப்பில் ஆய்வு செய்ய திண்டிவனம் பகுதிக்கு விடுமுறை நாட்களில் சென்று, ஆய்வுத் தரவுகளைத் திரட்டும் பொழுதெல்லாம் உடனிருந்து உதவுவார். அன்னை அம்சவேணி பெரியண்ணன், நல்லாமூரில் தங்கி, தன் கணவனாருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து, அனுப்பி வைப்பார். பெரியண்ணன் ஆய்வுக்காக, நெடிமோழியனூர், பெருமுக்கல், முன்னூர், இராவணாவரம், கிடங்கில், ரோசனை, கீழ் எடையாளம், செண்டூர் போன்ற பல ஊர்களுக்குச் சென்று பாடல்களைத் திரட்டி வருவார். அவசரம் அவசரமாகத் திரட்டிய பாடல்களை ஒழுங்குபடுத்தி, எழுதி வைப்பார். இவ்விதம் 4 ஆண்டுகள் உழைத்ததின் விளைவாகவே, சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற முடிந்தது. முனைவர் பட்ட ஆய்வேட்டை "நாடு போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்" என்ற நூலாக வெளியிட்டு, அரசினரிடமும் உதவித் தொகைப் பெற்றார்.
சுயமுன்னேற்ற நூல்கள், கணித நூல்கள், தன் கொழுந்தனார் எழுதியபொழுது அந்நூல்களையெல்லாம் வெளியிட்டார். "இலட்சியத்தை நோக்கி" வெற்றியின் முன்னேற்றப் படிகள், பழந்தமிழ் இலக்கியங்களில் கணிதம், கோலங்களில் கணிதம், கணித மன்றச் செயற்பாடுகள் போன்ற 15க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டவர். கணிதம் தொடர்பான பல நூல்களை வெளியிட்டு, பதிப்புத் துறையில் சாதனைப் பெண்மணியாகத் திகழ்கிறார்.
பரத்வாஜ் சுவாமிகள் எழுதிய 100க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய ஶ்ரீ நாலாயிர திவ்யப் பிரபந்தும், துர்கையைத் துதிப்போம், தட்சிணாமூர்த்தி, மகாகணபதி, தித்திப்பான வாழ்கைக்கு தித்திக்கும் பூஜை, யோகமாயா ஶ்ரீ புவனேஸ்வரி, சிவமூர்த்தங்கள் 64, ஶ்ரீ நரசிம்மர், அஷ்டமி துர்கா, மகா பைரவர், ஶ்ரீ ஆங்கநேயர், ஶ்ரீ வாராஹி, ஶ்ரீ கிருஷ்ண தந்திரமம் ஜகம் வெல்லும் மந்திரமும், பாலா, காலைப் பிடித்துவிட்டோம்! காத்து ரக்ஷிக்கணும் தேவி, ஶ்ரீ துர்கா, துர்காம்பிகை, மாணவர்களுக்கு வேண்டிய கதைகளும், சரஸ்வதி மந்திரங்களும், ஸ்வாமி பரத்வாஜரின் சத்திய விளக்கம், முருகப்பெருமானின் முத்தான நீதிக்கதைகள் போன்ற 100க்கும் மேற்பட்ட ஆன்மீக நூல்களை வெளியிட்டுள்ளார்.
சிங்கேரி மடத்தினுடைய ஆஸ்தான வித்துவான் ஶ்ரீ இராமகதாரத்தினம் வே.தியாகராசன் அவர்களுடைய பக்தி நூல்களையும் பதிப்பித்துள்ளார். தமிழும் வைணவமும், கோகுல நாயகன், இராமாயணம், பாரதம், முருகன் புகழ் நூல்கள், திருக்குறளும் தெய்வத்தின் குறளும், அம்மன் திருத்தலங்கள் போன்ற அரிய பக்தி நூல்களை வெளியிட்டு, பதிப்புத் துறையில் முத்திரைப் பதித்துள்ளார். சிறுவர்கள் கற்பதற்கேற்ற வகையில், வாசிப்புத்திறனை வளர்க்க ஆத்திசூடி கதைகள், கொன்றைவேந்தன் கதைகள், திருக்குறள் கதைகள், சிறுவர் பாடல்கள், சிறுவர் இன்னிசைப் பாடல்கள், மக்களிசைப் பாடல்கள், நன்னெறிக் கதைகள் போன்ற பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளார். திருக்குறள் வழி தமிழ் கற்பிக்க என்னும் நூலையும் தயாரித்து வைத்துள்ளார். வாசிப்புத் திறனை அதிகரிக்கச் செய்ய பெரிய எழுத்தில், விளக்கப் படங்களுடன் வெளியிட்டு, சாதனைப் பெண்மணியாகத் திகழ்கிறார்.
பேராசிரியர் மா.நன்னன், கலைமாமணி விக்கிரமன், முனைவர் பி.ரத்தினசபாபதி, புலவர் ம.இராமலிங்கம், பேராசிரியர் வே.சிவசுப்பிரமணியன் முனைவர் சு.வஜ்ரவேலு, முனைவர் வாசு.அறிவழகன், பாபநாசம் குறள்பித்தன், முனைவர் சம்பத், முனைவர்.அரிகிருஷ்ணன், பேராசிரியர் நாராயணன், சித்தர்.திருத்தணிகாசலம், தமிழ் மருத்துவர் தனபாலன், முனைவர். விஜயா போன்ற தமிழ் அறிஞர்களின் நூல்களை வெளியிட்டுள்ளார்.
பெண்ணெழுத்தாளர்கள் என்றாலே முதலில் முக்கியத்துவம் கொடுப்பதில் ஆர்வம் காட்டுவார். அந்த எழுத்தாளர்களை அழைத்து அவர்களுடைய கைப்பிரதியை வாங்கி படித்துப் பார்த்து அடுத்த தலைமுறையில் பெண் எழுத்தாளர்கள் இல்லாமலேயே போய்விடுவார்கள் என்ற கவலையோடு பெண் எழுத்தாளர்களை ஊக்குவிப்பார்.
பெண் எழுத்தாளர்கள் மிகவும குறைந்தே காணப்படுகின்றனர் என்பது அன்னை அம்சவேணி பெரியண்ணன் அவர்களுடைய கவலை. எனவே, வனிதா பதிப்பகத்தைப் பொருத்தவரை கவிஞர். தே.இராஜலட்சுமி, திருமதி.குமாரதேவி, பேராசிரியர் கு.விஜயா, திருமதி.லதா ராமானுஜம், பேராசிரியர் காளியம்மாள், பெண்ணிய சிந்தனையாளர் பாலப்பிரபா, முனைவர் த.உமாராணி, எம்.ஆர்.லட்சுமி, எஸ்.புனிதவல்லி, சாரதா வெட்கராமன், வி.கோமதி, பேராசிரியர் ஆர்.இலதா, பேராசிரியர் ஏ.பரீத் ஜெயதேவி, பேராசிரியர் எம்.புனிதவள்ளி, எஸ்தர் கோக், மேகலா சித்ரவேல், ச,சதாசிவானந்த சௌத்ரநாயகி போன்ற பல்வேறு பெண் எழுத்தாளர்களின் நூல்களை முதன்முதலில் வனிதா பதிப்பகம் வெளியிட்டதைப் பெருமையாக கருதுவார்.
வனிதா பதிப்பகத்தை முன்னின்று நடத்தி, அனைவரும் மதிக்கும் நல்ல பயனுள்ள நூல்களை வெளியிட்டு, முதல் பெண் பதிப்பாளர் என்ற பெருமைக்குரியவராக விளங்கினார்.
25 லட்சம் நட்டத்தை மன தைரியத்துடன் வென்றார் :
2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மிகப்பெரிய மழை வெள்ளத்தால் சென்னை மூழ்கியது. மூன்று நாட்கள் மின்சாரம், உணவு இல்லாமல் தவித்த நேரத்தில் வனிதா பதிப்பகமும் நீரில் மூழ்கியது. சுமார் 25 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் நீரில் மூழ்கியது. இதைக் கண்ட அவர் மனதைரியத்துடன் அனைத்து நூல்களையும் தூக்கி எறிந்தார். இவ்வளவு பெரிய நட்டம் ஏற்பட்டிருந்தாலும் மனம் தளராமல் புதிய நூல்களை வெளியிடுவதில் முனைப்பு காட்டினார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வனிதா பதிப்பகத்தின் சார்பாக உணவு நிவாரண உதவிகளைச் செய்தார்.
பதிப்பகப் பணியில் இரண்டாவது தலைமுறையாக தன் மகன் பெ.மயிலவேலனை ஆட்படுத்திய அறிஞர் அம்சவேணி :
1994ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பு முடித்த தன் மகன் பெ.மயிலவேலனை பதிப்பகப் பணியில் இரண்டாவது தலைமுறையாக சிறந்து செயற்படுமாறு பணித்தார் வனிதா பதிப்பகம் அன்னை அம்சவேணி பெரியண்ணன்.
அதன்பின் மத்திய அரசின் வேலை வாய்ப்பு தன் மகனுக்கு வேறு மாநிலத்தில் கிடைத்தது. அந்த பணிக்கு செல்ல வேண்டாம் என்றும் பதிப்பகத்தையே முழுநேரம் கவனித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். அவரின் எண்ணப்படி மயிலவேலன் மத்திய அரசின் வேலைக்குச் செல்லாமல் முழு நேர பதிப்பாளராக செயற்படத் தொடங்கினார். இவரை M.Sc., M.Ed., M.Phil., Ph.D. வரை படிக்க வைத்தார்.
பதிப்பகப் பணியில் சிறந்து செயற்பட்ட வனிதா பதிப்பகம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தில் 20 ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்று வந்தது.
பதிக்கப் பணியில் வனிதா பதிப்பகத்தினுடைய வளர்ச்சியைப் பார்த்து பபாசியின் மேனாள் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் அவர்களும், பபாசியின் இந்நாள் தலைவர் எஸ்.வயிரவன் அவர்களும், 2011ஆம் ஆண்டு நிர்வாகக் குழு உறுப்பினராக தேர்தலில் போட்டியிடச் செய்து வெற்றி பெறச் செய்தனர். அதன்பின் 2015-2017ஆம் ஆண்டு திரு.காந்தி கண்ணதாசன் அவர்கள் தலைவராக இருந்தபொழுது பெ.மயிலவேலன் அவர்கள் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு துணைத் தலைவர் ஆனார்.
2017-2019ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021-2023 தன் மகனை இரண்டாவது தலைமுறையாக வனிதா பதிப்பகத்தின் சார்பாகவே தேர்தலில் நிற்க வைத்து துணை தலைவராக்கிய பெருமை அன்னை அம்சவேணி பெரியண்ணனையே சாரும்.
இந்தியப் படைப்பாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவராக ஒருமனதாக 2014 முதல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பில் சுமார் 600 உறுப்பினர்களைக் கொண்டு பதிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பணிகளை செய்து வருகின்றனர். வனிதா பதிப்பகத்தின் சார்பாகவே இந்த அமைப்பின் தலைவராக பெ.மயிலவேலன் செயற்பட்டு வருகிறார்.
Enter your e-mail address to receive regular updates, as well as news on upcoming events and special offers.