Vanitha Pathippagam

  • vanithapathippagam@gmail.com
  • 044-42070663
  • No.11, Nana Street, Pondy Bazzar, T.Nagar, Chennai - 17

FIRST WOMEN PUBLISHER

Vanitha Pathippagam book seller in chennai

தமிழகத்தின் முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் வாழ்கைக் குறிப்பு (தமிழறிஞர் வாழ்கைக் குறிப்பு)

  • பெயர் : அம்சவேணி பெரியண்ணன்
  • பிறந்த தேதி : 03.01.1955
  • மறைந்த நாள் : 21.06.2018
  • படிப்பு : M.A.,
  • பெற்றோர்கள் : தந்தை : சின்னசாமி நாயக்கர், தாயார் : காமாட்சி அம்மாள்
  • கணவர் பெயர் : நல்லாமூர் முனைவர் கோ.பெரியண்ணன் (தேசிய நல்லாசிரியர் விருது மற்றும் தமிழகத்தின் திருவள்ளுவர் விருது பெற்றவர்)
  • மகன் : பெ.மயிலவேலன்
  • மகள்கள் : பெ.வனிதாமணி

  • எழுதிய நூல்கள்:
  • உரைநூல்கள் - 12
  • திறனாய்வு - 1
  • கட்டுரைகள் - 6
  • ஆன்மீகம் - 2
  • பொன்மொழிகள் - 1
  • சுயமுன்னேற்றம் - 1
  • நலவியல் - 7


    உரை நூல்கள்:
  • நான்மணிக்கடிகை அம்சவேணி பெரியண்ணன் உரை,
  • சிறுபஞ்சமூலம் அம்சவேணி பெரியண்ணன் உரை,
  • திரிகடுகம் அம்சவேணி பெரியண்ணன் உரை,
  • ஏலாதி அம்சவேணி பெரியண்ணன் உரை,
  • நாலடியார் அம்சவேணி பெரியண்ணன் உரை,
  • முதுமொழிக் காஞ்சி அம்சவேணி பெரியண்ணன் உரை,
  • கார் நாற்பது களவழி நாற்பது அம்சவேணி பெரியண்ணன் உரை,
  • கைந்நிலை அம்சவேணி பெரியண்ணன் உரை
  • ஐந்திணை ஐம்பது அம்சவேணி பெரியண்ணன் உரை,
  • ஆசாரகோவை அம்சவேணி பெரியண்ணன் உரை,
  • இன்னா நாற்பது இனியவை நாற்பது அம்சவேணி பெரியண்ணன்,
  • ஐந்திணை எழுபது அம்சவேணி பெரியண்ணன் உரை.

  • ஆன்மீகம் :
  • அன்னை அரவிந்தர்
  • யோக தட்சிணாமூர்த்தி

  • பொன்மொழிகள் :
  • டாக்டர் ஏ.பெ.ஜெ.அப்துல்கலாம் பொன்மொழிகள்

  • சுயமுன்னேற்றம் :
  • வெற்றி நமதே

  • நலவியல்:
  • சுவைமிகு மட்டன் சமையல்
  • சுவைமிகு இறால். நண்டு சமையல்
  • சுவைமிகு சிக்கன் சமையல்
  • செட்டிநாட்டு சமையல்
  • சுவைமிகு சைவ சமையல்
  • சுவைமிகு டிபன் சமையல்
  • உடல்நலம் காக்கும் கிராமியச் சமையல்

  • வகித்த பதவிகள்:
  • தமிழகத்தின் முதல் பெண் பதிப்பாளர் - வனிதா பதிப்பகம் - நிறுவனர்
  • தலைவர், அம்சா கல்வி அறக்கட்டளை
  • தலைவர், நங்கைநல்லூர் மகளிர் மன்றம்
  • புரவலர், திருக்குறள் பேரவை, நங்கைநல்லூர்
  • வாழ்நாள் உறுப்பினர், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்

  • விருதுகள்:
  • தமிழக அரசின் சிறந்த நூல் வெளியீட்டாளருக்கான விருது (7 முறை விருதுகள் பெற்றவர்)
  • திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த நூல் வெளியீட்டாளருக்கான விருது
  • நெய்வேலி நிலைட் கார்ப்பரேசனின் சிறந்த பதிப்பாளருக்கான விருது (3 முறை)

  • பதிப்புத் தொழிலில் முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன்

    1978ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி வனிதா பதிப்பகத்தை துவக்கினார் அம்சவேணி பெரியண்ணன் அவர்கள். இவரே தமிழகத்தின் முதல் பெண் பதிப்பாளராகவும், முழுநேர பதிப்பாளராகவும் திகழ்ந்து சுமார் 3000த்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். கல்வி சார்ந்த நூல்களை வெளியிடுவதில் இவரே முதன்மையாக திகழ்ந்த முதல் பெண் பதிப்பாளர். அம்சவேணி பெரியண்ணன் அவர்கள் 21.06.2018ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இவருடைய நினைவைப் போற்றும் வகையில் பபாசி சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது சிறந்த பெண் எழுத்தாளர்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதை தமிழக முதல்வர் முதன்முதலில் துவக்கி வைத்தார்.


    1978ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டங்களும் பாடமுறைகளும் அறிமுகமாயின. ஆசிரியர்கள் தங்களைப் புதிதாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.பெரியண்ணன் தனகென்று தனிபாணியில் கல்வியைப் போதித்து வந்த நேரம். அவரை உற்று நோக்கிய நண்பர் நரசிம்மன், “நீங்கள் பாடம் நடத்தும் குறிப்பு முறைகளை, மாணவர்களுக்கு அச்சிட்டு வழங்கினால் நன்றாக இருக்குமே!” என்று தன் யோசனையினைக் கூறினார்.அந்த முயற்சியில் இறங்கினார் பெரியண்ணன். அதன் தயாரிப்புச் செலவுகள் குறித்து கணக்குப் போட்டுப் பார்த்தார். பிரதி ஒன்றுக்கு 50 பைசா அடக்க விலையானது.


    நரசிம்மன் ஒரு யோசனை கூறினார்

    “75 பைசா விலையில் நூல்களை மாணவர்களுக்கு வழங்கலாம்” என்றார்.


    அந்த நூல் பிரதி, பள்ளி ஆசிரியர்களையும் கவர்ந்தன. அதனால், தங்கள் பள்ளிகளுக்கும் அந்த நூலை வழங்கினால் நன்றாக இருக்கும் என்று வேண்டினர்.‘மொழிப்பயிற்சி ஏடு’ என்ற பெயரில் அச்சுக்குக் கொடுத்திருந்தார் பெரியண்ணன். அந்த முயற்சியைக் கேள்விப்பட்ட பொன்னேரிப் புலவர் அருணகிரி, “முத்தமிழ் மொழிப்பயிற்சி ஏடு” என்று பெயரிட்டார்.


    பெரியண்ணன் ஏராளமான பாராட்டுக்களையும் பெற்ற நேரம் இது


    அடுத்தடுத்து தன் நூல்களைப் புத்தக வடிவில் கொண்டு வர வேண்டுமென்று, இந்த நேரத்தில்தான் சிந்தித்தார் பெரியண்ணன்.விசாலாட்சி பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டார். நூல் வெளியானது, ஆனால், அதற்காகச் சில காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. இது பெரியண்ணன் மனதில் ஒரு குறையாகவே இருந்தது.அந்த நூலினால் பல பாடங்களையும் கற்றார். அதனால் தன் மனைவியிடம் ஒரு யோசனையைக் கூறினார். “ஒரு நூலை எழுதிவிட்டு, அதனை நூலாக்கிப் பார்க்க இத்தனை காலம் காத்திருக்க வேண்டுமா? நாமே சொந்தமாகப் பதிப்பித்தால் என்ன?” என்று கேட்டார்.அம்சவேணிக்கும் அந்த யோசனை பிடித்தது. தன் கணவரின் எந்த யோசனைக்கும் மறுப்பும், ஆட்சேபணையும் தெரிவிக்காதவர் ஆயிற்றே அவர்!.தான் எழுதிய “சிறுவர் பாடல்கள்” நூலை முதல் வெளியீடாகக் கொண்டு வரலாம் என்று முடிவு செய்தார் பெரியண்ணன்.


    2500 ரூபாய் முதலீடு செய்து அந்த நூலைச் சொந்தமாகத் தயாரித்தார். அப்போது நண்பர்கள் சிலர்,“சிறுவர் நூல்களுக்கு அத்தனை வரவேற்பில்லை” என்றனர்.நம்பிகையூட்டியவர் அம்சவேணி மட்டும்தான்.“சொந்தமாகப் பதிப்பிக்க வேண்டும் என்று நினைத்தீர்கள். இதோ பதிப்பித்தாகி விட்டது. இன்னும் ஏன் தயக்கம்?” என்று கேட்டார். இந்த நேரத்தில்தான் பெரியண்ணனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘தன் மனைவியையே பதிப்பாளர் ஆக்கினால் என்ன?’ என்று நினைத்தார்.தன் மனைவியிடமும் அந்த எண்ணத்தைத் தெரிவித்தார்.அம்சவேணி ஏனோ தயங்கினார். அவருடைய தயக்கத்தைப் போக்கினார் பெரியண்ணன்.“என்னுடைய இத்தனை வளர்ச்சி, பெயர், பெருமை எல்லாவற்றிற்கும் காரணமானவள் நீ. என்னைப் பெருமைப்படுத்திய உன்னை நான் பெருமைப்படுத்த விரும்புகிறேன்” என்றார்.


    வனிதா பதிப்பகம் உதயமானது; அது 1978ஆம் ஆண்டு, அதன் நிறுவனர், பதிப்பாளர் என்ற பெருமையினை அம்சவேணி பெற்றார்.புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், அந்த நூலைப் படித்துப் பார்த்து 100 பிரதிகளைப் பெற்றுக் கொள்ள விழைந்தார்.தான் வெற்றி பெற்றுவிட்டதை உணர்ந்தார் பெரியண்ணன்.அரசுக் கடன்பட்டுப் புத்தகம் வெளியிட்டுப் பெரியண்ணன் துன்பப்பட்ட நேரங்களில் எல்லாம் தன் நகைகளைக் கழற்றிக் கொடுத்து உதவினார் அம்சவேணி.பெரியண்ணன் தயங்கியபோது, தானே மார்வாடி கடைக்குச் சென்று நகைகளை அடகு வைத்துப் பணம் பெற்றுத் தன் கணவனுக்குத் தந்து உதவினார்.தன்னை உயர்த்தி அழகு பார்த்த மனைவியைப் பெருமைப்படுத்தவே அம்சவேணியைப் பதிப்பாளர் நிலைக்கு உயர்த்தினார் பெரியண்ணன்.அந்தக் காலக்கட்டத்தில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகவும் உயர்ந்தார் பெரியண்ணன். வறுமையிலும் செம்மையாக அவரை வாழ வைத்தவர் அம்சவேணி. அவருக்குத் துன்பம் நேர்ந்தபோதெல்லாம், துவண்டு விடாமல் இருக்கத் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கியும் வந்தார் அம்சவேணி.அவருடைய இந்தக் குணம்தான் பெரியண்ணன் மேன்மேலும் வளர்ச்சியை நோக்கி நடைபோட வைத்தது.


    சென்னைக்கு அருகில் உள்ள மறைமலை நகரில் இந்திய அளவிலான ‘ஜாம்பூரி’ நடைபெற்றது. பெரியண்ணன் சாரண இயக்கத் தலைவர் என்ற முறையில் அங்குக் கிளம்பிச் சென்றார். அவருக்கு நல்லதொரு ஊக்கத்தைத் தந்து வழியனுப்பி வைத்தார் அம்சவேணி.மூன்று நாள்கள் அந்த ஜாம்பூரியில் பங்கேற்ற பெரியண்ணன், இலக்கியம் சம்பந்தமாகப் பல பயிற்சிகளையும் மாணவர்களுக்கும் பயிற்றுவித்தார்.மாவட்ட அளவில் சாரணர் அமைப்பில் உயர்ந்திருந்த பெரியண்ணன், அது பற்றிய நூல் ஒன்றினை எழுத விரும்பினார். அதற்குண்டான எல்லாத் தரவுகளையும் சேகரித்து வைத்திருந்தார்.தன் மனைவியிடம் தெரிவித்தார். அதற்கும் நல் ஊக்கம் கொடுத்தார் அம்சவேணி. அதே நேரம் பெரியண்ணன் மனதிற்குள் இன்னொரு எண்ணமும் குடி கொண்டிருந்தது. “ஆண்டுக்கு ஒரு நூல் வெளியிடலாம்னு நினைக்கிறேன்” என்றார் பெரியண்ணன்.அம்சவேணி தீர்க்கமாக, “ஒரு நூல்தானா? ஆண்டிற்குப் பல நூல்களையும் நாம் பதிப்பிக்கும் நிலைக்கு உயர்வோம்” என்றார்.


    தன் மனைவியைப் பிரமிப்புடன் பார்த்தார் பெரியண்ணன்.


    மனைவியின் வாக்கு மிகச் சரியாகப் பலிக்கும் என்றோ, பின்னாட்களில் தங்கள் பதிப்பகம் ஆயிரக்கணக்கான நூல்களைப் பதிப்பித்துப் பதிப்பக உலகில், தனிப்பெரும் இடத்தினை வகிக்கும் என்றோ அவர் அன்று கண்டிப்பாக நம்பியிருக்கமாட்டார்.ஆனால் அம்சவேணிக்கு அந்த நம்பிகை இருந்தது. காரணம், பெரியண்ணன் நூல்கள் எழுதுவார்; ஆசிரியர் பணிக்குச் செல்வார்; இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வார். அவ்வளவே அவருடைய பங்களிப்பு.அம்சவேணியோ பதிப்பாளர், நூல் விற்பனையாளர், தாங்கள் எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதை அவர் நன்றாக அறிவார். அதனாலேயே அப்படிக் கூறினார்.சாரணர் இயக்கம் பற்றிய நூல் வெளியானது. அந்த நூல் சாரணர் இயக்கப் பயிற்சி பெறுபவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. எல்லா மாவட்டங்களிலும் சாரணர் பேரவையினர், அந்த நூலை தருவித்துக் கொண்டனர். பெரியண்ணன் புகழ் சாரணர் இயக்கத்தினர் அனைவரிடமும் போய்ச் சேர்ந்தது.பெரியண்ணன் டெல்லி வரை பேசப்பட்டார். அதன் காரணமாக 1979ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றார். மறைமலைநகர் ஜாம்பூரியில் பங்கு பெற்றுச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற 51 பேரை அழைத்துக் கொண்டு டெல்லி கிளம்பினார்.அம்சவேணி இன்முகத்துடன் தன் கணவரை வழியனுப்பி வைத்தார். அந்தப் பயணத்தைச் சிறப்பாக முடித்துக் கொண்டு திரும்பினார் பெரியண்ணன்.


    அதே ஆண்டு சாரணர் இயக்கம் சார்பில் இலங்கைக்கும் சென்று வந்தார்.


    பெரியண்ணன் எப்போதும் இப்படித்தான். வீடு என்று ஒன்று இருப்பதையே மறந்து விடுவார். அவரைப் பொறுத்தவரையில் ஆசிரியர் பணி. மாலையில் நூலகம், அடுத்து இலக்கியம் என்று ஓடிக் கொண்டேயிருப்பார்.சிறிது ஓய்வு கிடைத்தாலும், ஏதாவது ஒரு நூலினை எழுதும் நோக்கில் அமர்ந்து விடுவார். அந்த நேரங்களில் எல்லாம் குடும்பத்தைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டவர் அம்சவேணிதான்.


    எழுத்துத் துறையில் சாதனைப் படைத்த அம்சவேணி பெரியண்ணன்

    அம்சவேணிக்குச் சிறு வயதிலிருந்தே வாசிக்கும் பழக்கம் இருந்தது. நல்ல நல்ல நூல்களைத் தேடிப் படித்துத் தன் திறனை வளர்த்துக் கொண்டார். இலக்கிய ஆர்வம் கொண்ட பெரியண்ணன் அவரது கணவராக வாய்த்தது, அவர் செய்த பாக்கியம் என்றே சொல்லலாம். தன் கணவரின் அனைத்து முயற்சிகளிலும் நல்லூக்கம் கொடுப்பவராக அம்சவேணி விளங்கினார். அவரது ஒவ்வொரு உயர்விற்கும் படிக்கல்லாக விளங்கினார். சொந்தமாகப் பதிப்பகம் தொடங்க வேண்டும் என்று பெரியண்ணன் விரும்பியபோது முதலில் வரவேற்றவர் அம்சவேணிதான்.அதன் காரணமாகவே தன் மனைவியைப் பதிப்பாளராக்கி அழகு பார்த்தார் பெரியண்ணன். இப்போது எழுத வேண்டும் என்ற ஆவல் வந்தபோது அதனையும் வரவேற்றார் பெரியண்ணன்.

    “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்று கூறுவார்கள். அச்செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது, பெரியண்ணன் குடும்பத்தினரைப் பார்க்கும்போதுதான் தெரியவரும். பொதுவாக மிகப் பெரிய எழுத்தாளராக ஒருவர் வலம் வருகிறார் என்றால், அவரது பிள்ளைகளம் அத்தகைய சக்தியைப் பெற்றிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அப்படியே ஒருவர் எழுத முயன்றார் என்றாலும், அவர்களால் தங்கள் தந்தையாரைப்போல எழுத முடிவதில்லை. “நீ எழுதாவிட்டாலும் பரவாயில்லை. உன் தந்தையின் பெயரைக் கெடுக்காமல் இருந்தால் போதும்” என்று பிறர் சொல்லும் அளவிற்கே அவருடைய எழுத்து வன்மை இருக்கும். இலட்சத்தில் ஒருவரே தங்கள் தந்தையின் பெருமையினைக் காப்பாற்றுபவர்களாக இருப்பர். இன்னும் சொல்லப்போனால் தங்கள் தந்தையைவிடப் படைப்புத் திறனில் அதிக ஆளுமை செலுத்துபவராகவும் இருப்பர். பெரியண்ணன் குடும்பத்தினர், பெரியண்ணன் அவர் மனைவி அம்சவேணி, மகன் மயிலவேலன், மகள்களான வனிதாமணி, ஜோதிப்பிரியா யாவருமே நூல்கள் எழுதும் திறன் படைத்தவர்களாக உள்ளனர். அம்சவேணி முதலில் சமையல் சார்ந்த நூல்களைத்தான் எழுதினார். அதனைத் தானே பதிப்பித்து வனிதா பதிப்பகம் சார்பாக வெளியிடவும் செய்தார்.


    பின்னர் பெண்ணுரிமை, ஆன்மிகம், கட்டுரைகள் என்று பல நூல்களையும் எழுதினார்.பல நூல்களை அவர் எழுதியுள்ளார். அவற்றில்,


  • நான்மணிக்கடிகை அம்சவேணி பெரியண்ணன் உரை
  • சிறுபஞ்சமூலம் அம்சவேணி பெரியண்ணன் உரை
  • திரிகடுகம் அம்சவேணி பெரியண்ணன் உரை
  • ஏலாதி அம்சவேணி பெரியண்ணன் உரை
  • நாலடியார் அம்சவேணி பெரியண்ணன் உரை
  • முதுமொழிக் காஞ்சி அம்சவேணி பெரியண்ணன் உரை
  • கார் நாற்பது களவழி நாற்பது அம்சவேணி பெரியண்ணன் உரை
  • கைந்நிலை அம்சவேணி பெரியண்ணன் உரை
  • ஐந்திணை ஐம்பது அம்சவேணி பெரியண்ணன் உரை
  • ஆசாரகோவை அம்சவேணி பெரியண்ணன் உரை
  • இன்னா நாற்பது இனியவை நாற்பது அம்சவேணி பெரியண்ணன் உரை
  • ஐந்திணை எழுபது அம்சவேணி பெரியண்ணன் உரை
  • பெண் கல்வி
  • சீர்மிகு திருத்தலங்கள்
  • அருள்மிகு அம்மன் திருத்தலங்கள்
  • தசாவதார மகிமையும் துணைப் பாத்திரப் பெருமையும்
  • அன்னை அரவிந்தர்
  • டாக்டர் ஏ.பெ.ஜெ.அப்துல்கலாம் பொன்மொழிகள்
  • வெற்றி நமதே
  • செங்கோல் செலுத்திய செம்மல்கள்
  • கோகுல நாயகன்
  • யோக தட்சிணாமூர்த்தி
  • சுவைமிகு மட்டன் சமையல்
  • சுவைமிகு இறால், நண்டு சமையல்
  • சுவைமிகு சிக்கன் சமையல்
  • செட்டிநாட்டு சமையல்
  • சுவைமிகு சைவ சமையல்
  • சுவைமிகு டிபன் சமையல்
  • உடல்நலம் காக்கும் கிராமியச் சமையல்
  • போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

  • தனது பதிப்பாளர் பணியையும் மிகச் சிறப்பாகச் செய்தார் அம்சவேணி. தமிழக அரசின் சிறந்த பதிப்பாளர் விருதினைப் பலமுறை பெற்றுள்ளார். அவர் பதிப்பித்து வெளியிட்ட பிற எழுத்தாளர்களின் நூல்களும், எழுத்தாளர்களும் தமிழக அரசின் விருதினைப் பெற்றுள்ளனர். இவருடைய மகன் மயிலவேலன் எம்.எஸ்.சி., எம்.எட்., எம்.ஃபில்., பிஎச்.டி. எனப் பல பட்டங்களைப் பெற்றவர். தன் படிப்பிற்கேற்றபடி வேலையினைத்தேடி அவர் சொல்லவில்லை. தன் மகனைப் பதிப்புத்துறையில் ஆர்வமுள்ளவராக்கிய பெருமை அம்சவேணியையே சாரும்.

    வனிதா பதிப்பகத்தின் முதன்மை நிர்வாகியாக அவரை நியமித்தார். அவரது மேற்பார்வையில் வனிதா பதிப்பகம் மேன்மேலும் வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது. இன்று ஆயிரக்கணக்கான நூல்களைத் தங்கள் பதிப்பகத்தின் சார்பில் வெளியிட்டிருக்கின்றனர் என்றால், மயிலவேலனின் பங்கும் அதில் ஏராளமாக உள்ளது. பதிப்பகம் சார்ந்த சங்கங்களில் பல அரிய பொறுப்புகளையும் வகிக்கிறார் மயிலவேலன். நல்ல சிந்தனையாளர். நல்ல பேச்சாளர், மனிதாபிமானம் மிக்கவர் எனப் பல நல்ல குணங்களையும் ஒருங்கே பெற்றுள்ளார். தன் பெற்றோரிடமிருந்தே இத்தனை குணங்களையும் மயிலவேலன் பெற்றார் எனலாம். பெரியண்ணனின் தம்பி கோவி.பழனி, சிறந்த கணித வல்லுநர், மேனிலைத் தலைமையாசிரியராகப் பணியில் உள்ளார். இவரும் பல நூல்களை எழுதியுள்ளார்.

    குறிப்பாக கணித நூல்களை எழுதுவதில் வல்லவர். பல பரிசுகளைப் பெற்றிருப்பதே இவருடைய திறமைக்குச் சான்றாகும். அம்சவேணி தன் கணவருடன் பல இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். அங்கெல்லாம் உரையாற்றவும் செய்திருக்கிறார். 2001ஆம் ஆண்டு பெரியண்ணன் நல்லாசிரியர் விருது பெற்றபோது, அவருடன் அம்சவேணி, மகன் மயிலவேலுடன் சென்றார். அந்த விருதுக்கான அறிவிப்பு வந்தபோது, பெரியண்ணன் பள்ளிச் சீரமைப்பு மாநாட்டிற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார். 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் நாள் தன் மனைவி, மகனுடன் டில்லிக்குப் புறப்பட்டார் பெரியண்ணன்.

    SUBSCRIBE TO OUR NEWS LETTER

    Enter your e-mail address to receive regular updates, as well as news on upcoming events and special offers.